'கொரோனா'வால் ரயில்வேக்கு பெரும் இழப்பு

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலால், இந்த மாதத்தில், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளியூர், வெளிநாடுகள் செல்வதை, மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதையடுத்து மார்ச் மாதம் ரயில்வேயில் 63 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. விமான பயணியரும் டிக்கெட்களை ரத்து செய்துள்ளதால், விமான நிறுவனங்களும், பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. 170 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.