தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 227 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. அறிவிக்கையை காண இங்கு க்ளிக் செய்யவும். இந்த வனக்காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வரும் ஜனவரி 3வது வாரத்தில் இருந்து தொடங்கிறது.
இந்த நிலையில், தற்போது வனக்காவலர் பணி தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தரத்தில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. ஏற்கனவே, 24.6.2019 அன்று வனக்காப்பாளர், வனக்காவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கான பாடத்திட்டம் வெளியானது. தற்போது புதிதாக வெளியாகியுள்ள பாடத்திட்டமும் பெரும்பாலும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
ஹைலைட்ஸ்TN Forest Guard Recruitment 2020 தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 2 வது வாரத்தில் தொடங்குகிறது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் TN Forest Guard 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.