பூஜையும் பிரசாதமும்

உஷா பூஜை, உச்ச பூஜை, மற்றும் அட்டள பூஜை. இதேபோக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடந்து வருகிறது.


ஸ்ரீ கணபதி மற்றும் தேவி அம்மன் பூஜையும் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அவிலியம் நட்சத்திரம் அன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதில் நூறுள் பாலும் எனப்படும் சிறப்புப் படையலும் படைக்கப்படுகிறது.


அது பால் நெய் மஞ்சள் தேங்காய்தண்ணி இவற்றால் கலந்த ஒரு கலவையாகும். இவை நாக தேவதாஸ் என்னும் கடவுளுக்கு படைக்கப்படுகிறது. இங்கு ஐயப்ப சாமி மட்டுமில்லாமல் ஸ்ரீ கணபதியும் ஸ்ரீ பகவதி அவனுக்கும் பூஜைகள் நடைபெறுகிறது.


ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் என்ற அமைப்பு சில தீவிர ஐயப்ப பக்தர்களின் உதவியோடு, 1860 ஆம் ஆண்டு சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டத்தில் பதிந்துள்ளனர் மேலும் பாம்பே பப்ளிக் டிரஸ்ட் ஆக்ட் 1950இல், புதுப்பிக்கவும் தொடர்ந்து பராமரிக்கவும் இந்த கோவிலைப் பதிவு செய்து உள்ளனர்.


கேரளாவில் உள்ள சபரிமலையைப் போன்று இந்த கோவிலில் பெண்களுக்குத் தடை இல்லை. எல்லா வயதுப் பெண்களும் சென்று வர இங்கு அனுமதி உண்டு. குறிப்பாக, திருமணத் தடை நீக்கும் கோவிலாக இது பார்க்கப்படுகிறது.


திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் இங்கு வந்து வேண்டுதல் வைத்துச் செல்கிறார்கள்.