ஸ்ரீ ஐயப்பன்,ஸ்ரீ கணேசன், ஸ்ரீ தேவி அம்மன், மற்றும் ஸ்ரீ நாக தேவதாஸ் ஆகிய கடவுளுக்குத் தினமும் நடக்கும் பூஜைகளைத் தவிர்த்து சில திருவிழாக்களும் இங்கு அரங்கேறுகிறது.
இந்துக்களின் அனைத்து சிறப்புப் பூஜைகளும் இந்த கோவிலில் நடைபெறுகிறது அதைத் தவிர்த்து சில சிறப்புப் பூஜைகளும் திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது.
சுவாமி ஐயப்பனின் பிறந்த நாளான பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரதிஷ்டை தினம் விஷ்ணு புது வருடம், ஏப்ரல் பதினான்காம் நாள் கொண்டாடப்படுகிறது.
மேலும் கேரளாவில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகையும் இங்குக் கொண்டாடப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி,
தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விநாயகர் மற்றும் தேவி அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. மற்றும் அம்மனுக்கு வருடத்தில் ஒருமுறை பொங்கல் வைக்கப்படுகிறது. இந்த நாட்களில் கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் விரதமிருந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். அம்மனுக்குப் புஷ்பாஞ்சலி செய்து மங்கள சுக்த என்றும் சடங்கை நிறைவேற்றுகின்றனர்.