மினி சபரிமலை பற்றி தெரியுமா? சபரிமலைக்கு போகமுடியாத பெண்கள் இங்கே போலாமாம்

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே எல்லோருடைய நினைவிலும் நிற்பது சபரிமலையும் ஐய்யப்பனும் தான். சமீப காலத்தில் அதனுடன் சேர்ந்து சர்ச்சையும் ஆரம்பித்துவிட்டது. நீதிமன்றமே சொன்னாலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.


இதற்கு பல பாரம்பரியங்களும் வரலாறுகளும் சொல்லப்படுகின்றன.


அதனால் பெண்கள் சபரிமலைக்குச் சென்று ஐய்யப்பனை தரிசிக்க வேண்டுமென்று விரும்பினால் அந்த சபரிமலைக்குப் பதிலாக மினி சபரிமலைக்குச் சென்று வழிபடலாம். அந்த கோவில் எங்கிருக்கிறது? அதன் சிறப்புகள் என்ன என்று இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.


தென்னிந்தியாவில் கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் என்பது மிகவும் பிரபலம், மேற்குத் தொடர்ச்சி மலையில் கம்பீரமாக அமைந்திருக்கும் சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில்.


ஆனால் இதே கோவிலின் பிரதிபலிப்பாக மும்பையில் ஒரு தர்ம சாஸ்தா கோவில் இருப்பது நம்மில் பலபேர் அறியப்படவில்லை. மும்பையில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.


மும்பையில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் ஆனது, சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது. கேரளாவில் உள்ள கோவிலைப் போன்று இல்லாமல் இங்கு வருடம் முழுவதும் பூஜைகள் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிற