மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் குழுவுக்கு ரவீந்திரநாத் குமாரை தலைவராக நியமனம் செய்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று ப. ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதி அளித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பி. ரவீந்திரநாத் குமார் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள குமாரம், மணியஞ்சி, கல்லணை, மேட்டுப்பட்டி, தண்டலை ஆகிய பகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசி யுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகி யோரின் நல்லாசியுடன் வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் ஆதரவுடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நிச்சயம் உங்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் ஜல்லிக் கட்டு உரிமை பறிபோனது. அந்த ஜல்லிக்கட்டு உரி மையை மீட்டுத் தந்தது அம்மாவின் அரசு ஆகும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க இளைஞர்கள் போராடினார்கள். அதனை நினைவு கூறும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வாக்குறுதி தந்தார்கள். அந்த வாக் குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலின்போது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தருவேன் என்று கூறினேன் நிச்சயம் தமிழகத்திலுள்ள தலைசிறந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வண்ணம் வேலைவாய்ப்பு முகாமை ஏற்படுத்தி அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அவரது தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை நான் நிச்சயம் பெற்றுத் தருவேன். விவசாயிகளுக்கு மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க நான் நிச்சயம் இவருடன் பாடுபடுவேன். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே. மாணிக்கம், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட பலர் சென்று நன்றி தெரிவித்தார்கள்.
தந்தையின் வழியின் மகன்