இருயாடவ காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக சோனியா காந்தி ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் கடந்துவிட்டது. முன்பு இருபது ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதால், தொண்டர்கள் மத்தியில் அவருக்கு மரியாதையும் செல்வாக்கும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த முறை கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதாலேயே பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட்டு விடவில்லை என்பதைத்தான் கடந்த ஒரு மாத நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
கடந்த முறை சீதாராம் கேசரியை வெளியேற்றிவிட்டு சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கும்லைமைப் பொறுபபை ஏற்றதற்கும், இப்போது மீண்டும் தலைவராகி இருப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கும் தலைகீழ் மாற்றம் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. வாஜ்பாய் அத்வானி தலைமையில் இயங்கிய பாரதிய ஜனதா கட்சிக்கும், இப்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக நரேந்திர மோடி அமித் ஷா தலைமையில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே இருக்கும் மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வியூகம் எதுவும் காங்கிரஸிடம் இல்லை என்பதுதான் அந்தக் கட்சியின் பலவீனம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இந்தியாவின் முக்கியமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் தனக்கென்று செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரே கட்சியாகவும் காங்கிரஸ் தொடர்கிறது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சியைவிடப் பல மடங்கு வலுவாகவும், மக்களின் ஆதரவைப் பெற்றதாகவும் காங்கிரஸ் கட்சி திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இவையெல்லாம் இருந்தாலும் கூட, தொடர்ந்து எதிர்கொண்ட தேர்தல் தோல்விகளில் இருந்து சக்தி.